Home
Mobile

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. ரூ.9,499 ரேட்ல 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO SPARK Go 5G) கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.500 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். யுபிஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.50 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. ரூ.9,499 ரேட்ல 6000mAh பேட்டரி!

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO SPARK Go 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு டெக்னோ நிறுவனத்தின் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது. இதில் எல்லா ஏஐ (Ella AI) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant) போன்ற பீச்சர்கள் உள்ளன.

சர்கிள் டூ சர்ச் (Circle to Search) கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் கிடைக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா ஏஐ கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. ரூ.9,499 ரேட்ல 6000mAh பேட்டரி!

மேலும், 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.

டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் லைட் வெயிட்டில் 194 கிராம் எடை வருகிறது. அதேபோல 7.99 எம்எம் தடிமனில் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கிடைக்கிறது. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 5 வருடத்துக்கான லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்படுகிறது.

பிரீமியம் டிசைனில் டைனாமிக் போர்ட் (Dynamic Port) கொடுக்கிறது. அரிசோன்டல் கேமரா டிசைன் கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்கை ப்ளூ (Sky Blue), இன்க் பிளாக் (Ink Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் பைகனேர் ரெட் (Bikaner Red) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO SPARK Go 5G With 4GB RAM Available Under Rs 9500 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X