Home
Mobile

ஒரே அடிடா சாமி.. வெறும் ரூ.9,499 மட்ட ரேட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (Tecno Spark Go 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமரா கொடுக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மார்கெட் விலையை பார்க்கையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் பட்ஜெட் ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. குறிப்பிட்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் இந்த டெக்னோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ஒரே அடிடா சாமி.. வெறும் ரூ.9,499 மட்ட ரேட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் டெக்னோவின் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது.

ஆகவே, எல்லா ஏஐ (Ella AI), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. அதேபோல வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சரும் கிடைக்கிறது. டைமன்சிட்டி சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சிபியு மற்றும் ஜிபியு பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கிறது.

டைனாமிக் போர்ட் பீச்சருக்கு ஏற்ப 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டிஸ்பிளேவிலும் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் எதிர்பார்க்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.

ஒரே அடிடா சாமி.. வெறும் ரூ.9,499 மட்ட ரேட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்தின் டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போலவே இதில் டைனாமிக் போர்ட் பீச்சர் கிடைத்தது. இப்போது, டிசைனும் ஆப்பிள் மாடலுக்கு நிகராக இருக்கிறது. மெட்டாலிக் ஃபிரேம் லுக் கொடுக்கும்படி ஸ்கை ப்ளூ (Sky Blue), இன்க் பிளாக் (Ink Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் பைகானர் ரெட் (Bikaner Red) கலர்கள் கிடைக்கின்றன.

கேமரா டிசைன் பிரீமியம் காட்டுகிறது. ஆனால், சிங்கிள் ரியர் செட்டப் மட்டுமே இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இருப்பினும், 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த விலைக்கு ஏற்ப IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், டிடிஎஸ் (DTS) ஆடியோ மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட் கிடைப்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3,) கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) போன்ற பீச்சர்களும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 5G With 4GB RAM Available At Discounted Price in Flipkart Offer Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X