Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Tecno 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 14) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் சில அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark Go 5G specifications): 6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 194 கிராம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போன் அறிமுகமாகும்.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Tecno 5ஜி போன்.. எந்த மாடல்?

50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பின்பு இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போன் கம்மி பட்ஜெட்டில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டெக்னோ பாப் 9 5ஜி போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) பிரைமரி கேமரா மற்றும் ஏஐ செகண்டரி லென்ஸ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) கொண்டுள்ளது இந்த போன். மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதியும் இந்த போனில் உள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Tecno 5ஜி போன்.. எந்த மாடல்?

டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது. பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி ((Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 189 கிராம் ஆகும். தற்போது இந்த டெக்னோ பாப் 9 5ஜி போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 5G will be launched in India tomorrow: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X