ஆர்டர் அடிச்சு தூக்குது.. ரூ.9999 க்கு 5ஜி, 8GB ரேம், 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, IP64.. எந்த மாடல்?
டெக்னோ (Tecno) நிறுவனமானது ரூ.10,000 க்குள் என்கிற பிரிவில், அதன் மிகவும் பிரபலமான பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஒன்றின் புதிய கலர் ஆப்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (Tecno Spark Go 5G ) ஸ்மார்ட்போன் ஆகும்.
இப்போது இது பிரகாசமான ரெட் கலர் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது. டெக்னோ நிறுவனம் இந்த கலர் ஆப்ஷனை பிகானர் ரெட் (Bikaner Red) என்று அழைக்கிறது. பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனிற்கு இப்படி ஒரு அட்டகாசமான புதிய கலர் ஆப்ஷனை சேர்ப்பதன் மூலம் மீண்டும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை சூடுபிடிக்கும் என்று டெக்னோ நம்புவது போல் தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம் டெக்னோ பிராண்ட் ஆனது முதலில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனை 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியிட்டது: டர்க்கைஸ் க்ரீன், ஸ்கை ப்ளூ மற்றும் இங்க் பிளாக். இப்போது பிகானர் ரெட் உடன் சேர்த்து மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. ஆனால் அம்சங்கள் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது.
டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 670 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே உயரமான 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (MediaTek Dimensity 6400 SoC) மூலம் இயங்குகிறது. இது 4ஜிபி LPDDR4X RAM மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேம்படுத்தப்பட்ட மல்டி-டாஸ்கிங்கிற்காக இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 4ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐயும் (4GB Virtual RAM) அணுகலாம்; ஆக மொத்தம் 8ஜிபி ரேம்!
கேமராக்களை பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான 50 எம்பி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் (IP64 Rating) உடன் வருகிறது. கூடவே கால் அசிஸ்டென்ட் (Call Assistant) போன்ற ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 7.99மிமீ ஸ்லிம் பாடியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட்டில் (அனைத்து 4 கலர் ஆப்ஷன்களுமே) ரூ.ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) மாடலை வாங்கலாம். தற்போது இது பிளிப்கார்ட்டில் ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட டெக்னோ பாப் 9 5ஜி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது. மேலும் இதுவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 6.6-இன்ச் எல்சிடி பேனலை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








