Home
Mobile

TECNO அடிச்சான் பாரு.. ஜன.16 க்கு அப்புறம்.. மட்ட ரேட்ல Spark போன்.. IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் அடிமட்ட பட்ஜெட் மாடலான டெக்னோ ஸ்பார்க் கோ 3 (TECNO Spark Go 3) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் டெக்னோ மாடலாகவும் இந்த ஸ்பார்க் கோ 3 வெளியாக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ ஸ்பார்க் சீரிஸ் மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், அடிமட்ட பட்ஜெட்டில் இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். ஆனால், ரூ.20,000 விலை கொண்ட மாடல்களுக்கு நிகரான டிசைனை கொடுக்கும். மேலும், ஏஐ பீச்சர்கள் மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்கள் பட்ஜெட்டைவிட கூடுதலாக கொடுக்கப்படும்.

TECNO அடிச்சான் பாரு.. ஜன.16 க்கு அப்புறம்.. மட்ட ரேட்ல Spark போன்!

இப்போது, டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. வருகிற ஜனவரி 13 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, மைக்ரோசைட்டில் டிசைன் மற்றும் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

டெக்னோ ஸ்பார்க் கோ 3 அம்சங்கள் (TECNO Spark Go 3 Specifications): டிராப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட பட்ஜெட் மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏனென்றால், 1.2 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) கொடுக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

1.4 கி.மீ வரையில் கனெக்டிவிட்டி கொடுக்கும்படி டூயல்-லேன் நெட்வொர்க் (Dual-lane Network) கிடைக்க உள்ளது. மேலும், 4 வருடங்களுக்கு லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொண்ட சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதில் தமிழ் மொழியும் கிடைக்கிறது. மேலும், ப்ளூ மற்றும் பர்பிள் கலர்களில் கிடைக்க உள்ளது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இருப்பினும் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள டெக்னோ ஸ்பார்ட் கோ 2 மாடலை பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2 அம்சங்கள் (TECNO Spark Go 2 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 OS (Android 15 OS) கிடைத்துள்ளது. 6.67 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

இந்த பீச்சர்களுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,999 ஆக இருக்கிறது. ஆகவே, டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் மட்டுமே இருக்கும். ரூ.7,999 விலையில் ஆரம்ப வேரியண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டில் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 3 With IP64 Dust And Water Resistant Launching in India on January 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X