Home
Mobile

இப்படி இருக்கனும் பொங்கல் கிப்ட்.. ரூ.8,999 பட்ஜெட்ல TECNO போன்.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான டெக்னோ ஸ்பார்க் கோ 3 (TECNO Spark Go 3) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மலிவான விலைக்கு பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்பி கேமராவை கொடுத்துள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறங்குவதில் டெக்னோ நிறுவனமும் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. ஏனென்றால், இந்த மாடல்களின் டிசைன் ரூ.20,000 பட்ஜெட் மாடல்களை போலவே இருக்கும். ஆனால், விலை ரூ.10,000 பட்ஜெட்டுக்கும் கம்மியான இருக்கும். இப்படியான விலைக்கே இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி இருக்கனும் பொங்கல் கிப்ட்.. ரூ.8,999 பட்ஜெட்ல TECNO போன்!

இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் எல்லா ஏஐ (Ella AI) வாய்ஸ் அசிஸ்டன்ட் கொடுத்துள்ளது. மேலும், இந்தி, தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் இந்த ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் 2.0 (No Network Communication 2.0) கொடுத்துள்ளது. ப்ரீலிங்க் 2.0 (FreeLink 2.0), 1.2 டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) கிடைக்கிறது.

மலிவான விலையில் கிடைப்பதால், 4 வருடங்களுக்கு ப்ளூயன்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. டெக்னோ ஏஐ (TECNO AI), இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) போன்ற ஸ்மார்ட் பீச்சர்களையும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 இருக்கிறது.

இப்படி இருக்கனும் பொங்கல் கிப்ட்.. ரூ.8,999 பட்ஜெட்ல TECNO போன்!

டெக்னோ ஸ்பார்க் கோ 3 அம்சங்கள் (TECNO Spark Go 3 Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டாட் நாட்ச் ஸ்கிரீன் கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் வீடியோ கால்கள், செல்பீகளுக்கு 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

இந்த கேமராவில் பிளாஷ்ஸ்னாப் (FlashSnap), ஆட்டோஸ்னாப் (AutoSnap) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. டெக்னோ ஏஐ வழியாக ஏஐ ரைட்டிங் (AI Writing), ஹைய் டிரான்ஸ்லேட் (Hi Translate) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

எல்லா ஏஐ வழியாக வெப் சம்மரி (Web Summary), போட்டோ பேஸ்டு பிராப்லம் சால்விங் (Photo-based Problem Solving), போட்டோ எடிட்டிங் (Photo Editing) உள்ளது. மேலும், ஸ்கெடூல் கிரியேட்டிங் (Schedule Creating) மற்றும் நேவிகேஷனை (Navigation) அக்சஸ் செய்யலாம். ப்ரீலிங்க் 2.0 வழியாக நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருந்தும் கால்களை செய்து கொள்ளலாம். இது ப்ளூடூத் ரேஞ்ச்சில் மட்டுமே கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் யுனிசோக் டி7250 (UNISOC T7250) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்படும். 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. கைரோஸ்கோப் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. ஜனவரி 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இன்க் பிளாக் (Ink Black), டைட்டானியம் கிரே (Titanium Grey), அரோரா பர்பிள் (Aurora Purple) மற்றும் கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 3 With 4GB RAM 5000mAh Battery Launched in India Under Rs 9000 Sale From January 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X