Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.8,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W பாஸ்ட் சார்ஜிங்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் டெக்னோ ஸ்பார்க் கோ 3 (TECNO Spark Go 3) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு நம்ப முடியாத பிரீமியம் லுக் மற்றும் பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

எல்லா ஏஐ அசிஸ்டன்ட், அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே, டிராப் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்பில் & ஸ்பிளாஷ் சேப்டி போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்களை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.8,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. மாடல்?

மேலும், அமேசான் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.269 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.8,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. இன்க் பிளாக் (Ink Black), அரோரா பர்பிள் (Aurora Purple), கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 3 அம்சங்கள் (TECNO Spark Go 3 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கொண்டுள்ளது. ஆகவே, எல்லா ஏஐ (Ella AI) கிடைக்கிறது. நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் 2.0 (No Network Communication 2.0), ப்ரீலிங்க் 2.0 (FreeLink 2.0), ஏஐ கால் நாய்ஸ் ரெடக்சன் (AI Call Noise Reduction), ஏஐ சாங் ஐடென்டிபிகேஷன் (AI Song Identification), ஏஐ ஸ்கேன் டாகுமெண்ட் (AI Scan Document) மற்றும் ஏஐ பிளாஷ் ஸ்னாப் (AI Flash Snap) பீச்சர்கள் கிடைக்கிறது.

மேலும், ஆட்டோ ஸ்னாப் (AutoSnap), ஏஐ ரைட்டிங் (AI Writing) மற்றும் ஹைய் டிரான்ஸ்லேட் (Hi Translate) போன்ற பீச்சர்களையும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் உள்ளது.

6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்து இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செல்பீ & வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைத்துள்ளது.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுத்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 3 With 4GB RAM 13MP Camera Available For Purchase At Rs 8999 in Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X