Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.14,749 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

டெக்னோ பிரியர்களை மட்டுமல்லாமல், ரூ.15,000 பட்ஜெட்டில் பிரீமியம் லுக்கை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ (TECNO SPARK Go 3 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனையானது இந்திய மார்கெட்டில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. கிரெடிட் கார்டு சலுகை போக மேலும் மலிவான விலைக்கு இந்த டெக்னோ ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.14,749 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

பர்கண்டி ரெட் (Burgundy Red), எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black), மிஸ்ட் சில்வர் (Mist Silver) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய 4 கலர்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், எஸ்ஜிஎஸ் சர்டிபைடு டிராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Certified Drop Resistance) கிடைக்கிறது. ஆகவே, 1.5 மீட்டர் டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும்.

டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ அம்சங்கள் (TECNO SPARK Go 3 Pro Specification): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (Octa Core MediaTek Helio G81) சிப்செட் கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Arm Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து இருக்கிறது.

6.78 இன்ச் (720 x 1526 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் நாட்ச் டிசைனில் வெட் ஃபிங்கர் டச் (Wet Finger Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமராவுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ கிடைக்கிறது.

டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 300 சதவீத லவுட் வால்யூம் சப்போர்ட் வருகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type - C Charging) சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.04 எம்எம் தடிமன் மற்றும் 194 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ கிடைக்கிறது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. ஏஐ வாய்ஸ்பிரிண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Voiceprint Noise Cancellation) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களையும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO SPARK Go 3 Pro With 4GB RAM Goes on Sale Today Under Rs 15000 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X