மிரளுது மார்கெட்.. ரூ.15999 பட்ஜெட்ல IP69 ரேட்டிங்.. 12GB ரேம்.. 5200mAh பேட்டரி.. DTS ஸ்பீக்கர்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடல்கள் பட்ஜெட்டில் கிடைத்தால், அதற்கு வரவேற்பு பட்டையை கிளப்பும்படி இருக்கும். இதற்கு ஏற்ப டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ (TECNO SPARK Go 3 Pro) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ப்ரோ மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பெயருக்கு ஏற்ப பீச்சர்களில் அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து, டியூரிபிலிட்டியில் பிரீமியம் காட்டி இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ அம்சங்கள் (TECNO SPARK Go 3 Pro Specification): 6.78 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பஞ்ச்-ஹோல் நாட்ச் கொடுக்கப்பட்டு உள்ளது.
டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. இதில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 300 சதவீத லவுட் வால்யூம் சப்போர்ட் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. ஆகவே, டிவி, ஏசி உள்ளிட்ட டிவைஸ்களை கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். இந்த செக்மெண்ட்டில் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கொண்ட முதல் மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது.
ஆகவே, வெட் ஃபிங்கர் டச் (Wet Finger Touch) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்டர் டிராப் இருந்தாலும், டச் பக்காவாக இருக்கும். இதுபோக எஸ்ஜிஎஸ் சர்டிபைடு டிராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Certified Drop Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1.5 மீட்டர்கள் உயரத்தில் இருந்து விழுந்தாலும் டியூரபிலிட்டி கொடுக்கும். வாய்ஸ் கால்களுக்காக பிரத்யேக பீச்சர் இருக்கிறது.
அதாவது, இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஏஐ வாய்ஸ்பிரிண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Voiceprint Noise Cancellation) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
12 ஜிபி வரையில் விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கும். கிரே, பிளாக், எல்லோ மற்றும் ரெட் ஷேட்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வேண்டுமானால், இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications