Home
Mobile

அமேசான் அதிருது.. ரூ.6,000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அமேசான் அதிரும் விதமாக டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) போனின் புதிய மெமரி வேரியண்ட் நம்ப முடியாத விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எச்டிபிளஸ் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, ஏஐ கேமரா என்று மிரளவிடுகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 அம்சங்கள் (Tecno Spark Go 2024 Specifications): இந்த டெக்னோ கோ போனில் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டாட்-இன் டிஸ்பிளே (Dot-In Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

ரூ.6000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

பாண்டா ஸ்கிரீன் பாதுகாப்பு (Panda Screen Protection) கொண்டுள்ளது. டைனாமிக் போர்ட் பீச்சர் (Dynamic Port Feature) வருகிறது. இந்த பீச்சர் மூலம் பேஸ் அன்லாக், சார்ஜிங் மற்றும் காலிங் அனிமேஷன்களை பார்த்து கொள்ளலாம். ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போல இது கொடுக்கப்பட்டுள்ளது.

டிடிஎஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (DTS Dual Stereo Speakers) வருகின்றன. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் ஹைய்ஓஎஸ் 13 (HiOS 13) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் T606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது.

மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி (microSD) எஸ்டி கார்டு சிலாட் கொண்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு ஏஐ லென்ஸ் (AI Lens) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual LED Flash) இடம்பெற்றுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் (3 ஜிபி ரேம் + 3 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்தன.

இப்போது, 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட புது வேரியண்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதோடு 256 ஜிபிக்கான மைக்ரேஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audi Jack) வருகிறது.

பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் சைடு பேஸ்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-faced Fingerprint Sensor) வருகிறது. இந்த டெக்னோவில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது. 8.55 தடிமன் கொண்டுள்ளது.

இதுவொரு 4ஜி வேரியண்ட்டாகும். மிஸ்டரி ஒயிட், கிராவிட்டி பிளாக் மற்றும் மேஜிக் ஸ்கின் கிரீன் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.7,200ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசானில் ரூ.1229 தள்ளுபடியில் விற்பனையாகிறது. இந்த தள்ளுபடியானது, பேங்க் ஆப் பரோடா கார்டுக்கு வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2024 With 128GB Storage Goes For Sale With Discount in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X