Home
Mobile

அமேசான் அதிருது.. வெறும் ரூ.6,699 போதும்.. 6GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த டெக்னோ பிரியர்களும் அமேசான் தளத்தில் குவியும்படியான பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம், 256ஜிபி மெமரி சப்போர்ட், டைனாமிக் போர்ட் பீச்சர், 5000mAh பேட்டரி போன்ற கிடைக்காத அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 அம்சங்கள் (Tecno Spark Go 2024 Specifications): இந்த டெக்னோ போனில் 6.6 இன்ச் (720 x 1612) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுவொரு பன்ஞ்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) மாடலாகும்.

ரூ.6699 போதும்.. 6GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த பன்ஞ் ஹோல் டிஸ்பிளேவில் ஐபோன்களின் வரும் டைனாமிக் ஹைலேண்ட் பீச்சரை போலவே, டைனாமிக் போர்ட் (Dynamic Port) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பீச்சர் மூலம் பேஸ் அன்லாக் (Face Unlock), சார்ஜிங் அனிமேஷன் (Charging Animation) மற்றும் இன்டிகேஷன் ஆகியவற்றை நோட்டிபிகேஷன்களாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஓஎஸ் (Android 13 Go Edition OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 13.0 (HiOS 13.0) வருகிறது. அதோடு ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. இதில் 3 ஜிபி மெமரி ப்யூஷன் டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

அதோடு 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் முதல்முறையாக டிடிஎஸ் டெக்னாலஜி (DTS Technology) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்தை இந்த டெக்னோ போன் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் சைடு எட்ஜ் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக்கிங் (Side Edge Fingerprint Unlocking) சென்சார் வருகிறது. அதேபோல பேஸ் அன்லாக் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் வருகிறது.

அதோடு டூயல் எல்இடி ஃபிளாஷ் லைட் (Dual LED Flashlight) மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் எச்டிஆர் எஃபெக்ட் (HDR Effect) சப்போர்ட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப மினிமம் குவாலிட்டியில் போட்டோக்களை எடுத்து கொள்ள முடியும்.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்சிங் சப்போர்ட் வருகிறது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி (Dual 4G), ஜிபிஎஸ் (GPS), வை-பை (Wi-Fi), எப்எம் (FM) மற்றும் ஓடிஜி (OTG) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த டெக்னோ மாடலில் கிராவிட்டி பிளாக் (Gravity Black), மிஸ்டிரி வைட் (Mystery White) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போன் இன்று (டிசம்பர் 4) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த போனின் விலை ரூ.7,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.6699 போதும்.. 6GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இருப்பினும், அறிமுக சலுகையாக வெறும் ரூ.6,699 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த போனை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். மிகவும் கம்மியான விலையில் பக்காவான டிசைனில் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த போனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2024 Sale Under Rs 8000 in Amazon From December 7 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X