ஆர்டர் அள்ளுமே.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய டெக்னோ போன்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் கோ 2024 எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 முழு அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த யுனிசாக் டி606 பிராசஸர் ( Unisoc T606 processor) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு டி-கோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
13எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 மாடல்.
இதுதவிர டூயல் எல்இடி பிளாஸ் (Dual LED flashlights ) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 மாடல். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் ( side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ஓடிஜி, எஃப்எம் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 மாடல். மேலும் கிராவிட்டி பிளாக் (Gravity Black), மேஜிக் ஸ்கின் (Magic Skin), அல்பெங்லோ கோல்ட் (Alpenglow Gold) மற்றும் மிஸ்டரி ஒயிட் (Mystery White) நிறங்களில் வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனின் வடிவமைப்பு ஆப்பிள் ஐபோன் போன்றே உள்ளது. ஆனால் இந்த போனின் விலை மற்றும் விற்பனை தேதியை வெளியிடவில்லை டெக்னோ நிறுவனம். அதேபோல் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2024 மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டெக்னோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








