மார்க்கெட்டை புரட்டி போட போகுது! வெறும் ரூ.7200-க்கு 90Hz டிஸ்பிளே, Dynamic Port, 8ஜிபி RAM, 5000mAh பேட்டரி!
ரூ.8000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 90 ஹெர்ட்ஸ் டாட்-இன் டிஸ்பிளேவுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்கிற டேக்லைன் உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சில சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. அதேபோல இந்த 2024 மாடலானது டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark Go 2023) மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக (Upgraded Version) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மாடலானது குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் (Quad-core MediaTek Helio A22 SoC), 10வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (10W Wired Charging Support) உடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் தான் 2024 மாடலின் இந்திய அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்று அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக 'டீஸ்' செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை வழங்கும்? இதோ விவரங்கள்:

டெக்னோ ஸ்பார்க் கோ 2024-இன் மைக்ரோசைட் (Microsite) ஆனது தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நேரலையில் உள்ளது. இது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) மற்றும் விலையை விவரிக்கவில்லை. ஆனால் இது ரூ.8000 க்குள் என்கிற விலையில் 90 ஹெர்ட்ஸ் டாட்-இன் டிஸ்பிளேவுடன் (90Hz dot-in Display Phone under Rs.8000) இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஏற்கனவே மலேசிய சந்தையில் அறிமுகமாகி விட்டது. அங்கே 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.7,200 க்கு வெளியாகியுள்ளது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இந்திய சந்தையில் 6ஜிபி + 64ஜிபி ஆப்ஷன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, மலேசியாவில் இது கோல்ட் (Gold), பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கிராவிட்டி பிளாக் (Gravity Black) மற்றும் மிஸ்டரி ஒயிட் (Mystery White) என்கிற 2 கலர்களில் அறிமுகமாகும் என்பதை டெக்னோ ஸ்பார்க் கோ 2024-இன் டீஸர் உறுதிப்படுத்துகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஸ்பார்க் கோ 2024-இன் இந்திய மாறுபாடானது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை (90Hz Refresh Rate Display) பேக் செய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (Finger Print Sensor) கொண்டிருக்கும்.
ஆக்டா-கோர் யுனிசாக் டி606 சிப்செட் (Octa-core Unisoc T606 chipset) மூலம் இயக்கப்படும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் (6GB RAM) உடன் அனுப்பப்படும். மேலும் இது விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சத்தையும் கொண்டிருக்கும். அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ "கடனாக" வாங்க உதவும் ஒரு அம்சமாகும்.
மேலும் இது 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 கோ (Android 13 Go) அடிப்படையிலான ஹைஓஎஸ் 13.0 (HiOS 13.0), டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர்கள் (Dual DTS Speakers), 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + ஏஐ கேமரா (AI Camera) என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும். சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதும் உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications