Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 8GB ரேம்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான டிசைன் மட்டுமல்லாமல், டைனாமிக் போர்ட் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2 (TECNO Spark Go 2) வெளியாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனின் முழு பீச்சர்கள் என்ன? விலை மற்றும் விற்பனை எப்படி?

டெக்னோ ஸ்பார்க் கோ 2 அம்சங்கள் (TECNO Spark Go 2 Specifications): இந்திய மார்கெட்டில் பட்ஜெட் மாடல்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், பிரீமியம் லுக் கொடுக்கும் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதை புரிந்து கொண்ட டெக்னோ நிறுவனமானது, டெக்னோ ஸ்பார்க் கோ 2 மாடலை களமிறக்கி இருக்கிறது. பார்ப்பதற்கு சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் போல இருக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஈங்க் பிளாக் (Ink Black), டைட்டானியம் கிரே (Titanium Grey), வெய்ல் ஒயிட் (Veil White) மற்றும் டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு வாட்டர்-டிராப் நாட்ஜ் டிஸ்பிளேவை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது. அதேபோல டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சரை கொடுக்கிறது.

இதுபோக எல்லா ஏஐ (Ella AI), ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் (AI Writing Assistant), ஏஐ போட்டோ ப்ராப்லம் சால்விங் (AI Photo Problem Solving) மற்றும் ஏஐ டாக்குமெண்ட் அசிஸ்டன்ட் (AI Document Assistant) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. இப்படி ஏஐ மற்றும் ஸ்மார்ட் பீச்சர்களில் பின்னியெடுக்கிறது.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் டைமன்சிட்டி அல்லது ஸ்னாப்டிராகன் எதிர்பார்க்க முடியவில்லை. ஆகவே, மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மட்டுமே பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடலுக்கு மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெக்னோ போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது.

ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகும் போன்களில் கிடைப்பதை போல, 5000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வரவேற்க வேண்டியது. அதேபோல இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் முதல் முறையாக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 6,999ஆக இருக்கிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 2 With 4GB RAM Launched India Sale From July 1 on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X