Home
Mobile

மிரளுது விற்பனை.. ரூ.6,999 போதும்.. 120Hz டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான விலைக்கு 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2 (TECNO Spark Go 2) போனானது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் IP64 ரேட்டிங் கொடுக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் சிப்செட் கொண்ட இந்த ஸ்பார்க் கோ 2 போனின் விலை விவரங்கள் இதோ.

டெக்னோ ஸ்பார்க் கோ 2 பிளிப்கார்ட் விற்பனை (TECNO Spark Go 2 Flipkart Sale): இந்த டெக்னோ போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ. 6,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் டிசைனில் 4 கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

மிரளுது விற்பனை.. ரூ.6,999 போதும்.. 120Hz டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

ஆகவே, டைட்டானியம் கிரே (Titanium Grey), ஈங்க் பிளாக் (Ink Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் வெய்ல் ஒயிட் (Veil White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம். சிங்கிள் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. மொத்தமாக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது.

ஏனென்றால், டெக்னோ மாடல்களில் கிடைக்கும் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர்கள் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனிலும் கிடைக்கிறது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது.

இப்படி பட்ஜெட் விலையிலும் டிசைனில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனானது பக்கா ஆப்ஷனாக இருக்கும். இப்போது, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு வொர்த்தா இல்லையா என்று பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2 அம்சங்கள் (TECNO Spark Go 2 Specifications): இந்த டெக்னோ போனில் ஹைஓஎஸ் 15 (HiOS 15) வருகிறது. இந்த ஓஎஸ் மூலம் ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் (AI Writing Assistant), ஏஐ டாக்குமெண்ட் அசிஸ்டன்ட் (AI Document Assistant) மற்றும் எல்லா ஏஐ (Ella AI) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஏஐ பீச்சர்கள் முக்கிய பிளஸ்-ஆக இருக்கிறது.

அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 12என்எம் யுனிசோக் டி7250 (Octa Core 12nm UNISOC T7250) வருகிறது. சிப்செட் மூலம் மீடியம் பர்ஃபாமென்ஸ் கிடைத்தாலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மூலம் லேட்டஸ்ட் யுஐ அனுபவம் எதிர்பார்க்கலாம். இந்த டெக்னோ போனுக்கு 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் உள்ளது.

மேலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, சைடு-பேசிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டூயல் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளது. டிசைன் மற்றும் குவாலிட்டி நன்றாக இருக்க வேண்டுமானால், இந்த ஸ்பார்க் கோ 2 மாடலை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark Go 2 With 4GB RAM Available For Purchase in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X