Home
Mobile

ஜூன் 24 உறுதி.. 5000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. இந்தியாவுக்கு வரும் புது Tecno போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2 (Tecno Spark Go 2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஜூன் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் பிளாக், லைட் ப்ளூ, லைட் கோல்டு, சியான்(Cyan) உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய போன் வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஜூன் 24 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Tecno போன்.. எந்த மாடல்?

டெக்னோ ஸ்பார்க் கோ 2 அம்சங்கள் (Tecno Spark Go 2 Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தரமான யுனிசாக் டி615 (Unisoc T615) சிப்செட் வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஆண்ட்ராய்டு 15 கோ இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன். குறிப்பாக IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)ஆதரவுடன் இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000mAh பேட்டரி வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.10,999-க்கு கீழ் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2 india launch date revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X