ஆளுக்கு 2-ஆ வாரி போடுங்க.. ரூ.7000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. 15W சார்ஜிங்.. பீச்சர் எப்படி?
ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோர்களுக்கு பக்கா ஆப்ஷனாக டெக்னோ ஸ்பார்க் கோ 2 (TECNO Spark Go 2) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் கிடைப்பதால், பீச்சர்கள் பெரிதாக இருக்காது என்று நினைக்கலாம். அதற்கு முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்பிளாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பிரீமியம் லுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், வாட்டர் டிராப் நாட்ச் கிடைக்கும் பட்ஜெட்டில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கொடுக்கிறது. வெக்டிகல் கேமரா லுக்கில் சிங்கிள் ரியர் கேமரா கொடுக்கிறது. இருப்பினும், டூயர் ரியர் போல பம்ப் கொடுக்கிறது.

இந்த டிசைனில் இன்க் பிளாக் (Ink Black), டைட்டானியம் கிரே (Titanium Grey), வெய்ல் ஒயிட் (Veil White) மற்றும் டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த டிசைனுக்கு ஏற்ப IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து இருக்கிறது.
4 வருடங்களுக்கான லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கிறது. வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சருடன் எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் அவுட்புட் கிடைக்கிறது. இதுபோக லிங்க்பூமிங் வி1.0 (Linkbooming V1.0) கிடைக்கிறது.
அதேபோல 4G+ நெட்வொர்க் சப்போர்ட் போன்ற என்ஹான்ஸ்டு கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கிறது. ஏஐ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப கூடுதல் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இப்போது டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற முக்கிய பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு முன்பே சொன்னதை போல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
ஹைஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், ஓஎஸ் அப்கிரேட் கிடைக்கவில்லை. அதேபோல ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa-Core UNISOC T7250 12nm) சிப்செட் மட்டுமே கிடைக்கிறது. இந்த சிப்செட்டுடன் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்க மாலி ஜி57 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் செல்பீ ஷூட்டர் இருப்பதால், டைனாமிக் போர்ட் பீச்சர் மூலம் பிரீமியம் அனுபவம் எதிர்பார்க்கலாம். ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஜாக் கிடைக்கிறது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 16 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.7,499ஆக இருக்கிறது. இதுபோக பிளிப்கார்ட் தளத்தில் ரூ.375 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,124 பட்ஜெட்டில் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி மட்டுமே கொடுக்கப்படும். ரூ.7,000 பட்ஜெட்டில் பக்கா மாடலாகும்.


Click it and Unblock the Notifications








