Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.7299-க்கு செஞ்சிட்டாங்க.. 120Hz டிஸ்பிளே.. 1TB மெமரி.. DTS ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) கிடைக்கிறது. ஐபோன் போன்ற டிசைன் மட்டுமல்லாமல், டைனாமிக் போர்ட் பீச்சர் கொண்ட 120Hz டிஸ்பிளே, டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர்கள், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களில் பட்ஜெட் பிரியர்களை தூக்கி சாப்பிட்டுள்ளது. இந்த டெக்னோ குறித்த விவரங்கள் இதோ.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 விலை (Tecno Spark Go 1 Price): இந்த டெக்னோவின் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.7,299ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.6,999 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை கவர் செய்துள்ளது.

பொளக்குது விற்பனை.. ரூ.7299-க்கு செஞ்சிட்டாங்க.. 120Hz டிஸ்பிளே மாடல்!

டெக்னோ ஸ்பார்க் கோ 1 அம்சங்கள் (Tecno Spark Go 1 Specifications): அடிமட்ட பட்ஜெட்டிலும் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் டிசைனில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. ஆகவே, ஐபோன் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதேபோல ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் போன்று டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் வருகிறது.

ஆனால், பேஸ் அன்லாக், பேட்டரி சார்ஜிங் மற்றும் வாய்ஸ் கால்கள் போன்ற சில நோட்டிபிக்கேஷன்களை மட்டுமே இந்த பீச்சர் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த பீச்சருக்கு ஏற்ப பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) கொண்டிருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே உள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. மேலும், பட்ஜெட்டில் கிடைக்காத வெட் மற்றும் ஆய்லி டச் கன்ட்ரோல் (Wet & Oily Touch Control) சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது. வழக்கமான டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.7299-க்கு செஞ்சிட்டாங்க.. 120Hz டிஸ்பிளே மாடல்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் பட்ஜெட் போன்களில் அதிகம் வரும் ஆக்டா கோர் யுனிசோக் டி615 எஸ்ஓசி (Octa Core UNISOC T615 SoC) சிப்செட் கொண்டுள்ளது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் வரவேற்கும்படி 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது.

இந்த டெக்னோவில் நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) சப்போர்ட் உள்ளது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது. சர்க்குலர் ஷேப்டு கேமரா (Circular Shaped Camera) டிசைனில் 13 எம்பி மெயின் கேமரா வருகிறது. மேலும், 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இதுபோக, பட்ஜெட் மாடல்களில் வரும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனில் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது. ஸ்டார்ட்ரெயில் பிளாக் (Startrail Black) மற்றும் கிளிட்டெரி ஒயிட் (Glittery White) கலர்கள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 1 With 8GB RAM Sale Under Rs 7500 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X