Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல IPS டிஸ்பிளே.. 15W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டைனாமிக் போர்ட் பீச்சர், வெட் டச் கன்ட்ரோல் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, டிடிஎஸ் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சர்க்குலர் ஷேப்டு கேமரா சிஸ்டம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) களமிறங்கி இருக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 அம்சங்கள் (Tecno Spark Go 1 Specifications): இந்த டெக்னோவில் பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வெட் மற்றும் ஆய்லி டச் கன்ட்ரோல் (Wet & Oily Touch Control) சப்போர்ட் வருகிறது. இதுபோக லேட்டஸ்ட் டெக்னோ மாடல்களில் கொடுக்கப்படும் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் வருகிறது. பேட்டரி சார்ஜிங், பேஸ் அன்லாக் மற்றும் காலிங் நோட்டிபிகேஷன்களை இந்த பீச்சர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல IPS டிஸ்பிளே.. 15W சார்ஜிங் மாடல்!

இந்த டெக்னோவில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் (Type-C Port) சப்போர்ட் வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 1.4 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜிங் செய்து கொள்ளலாம். IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது.

டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனில் சர்க்குலர் ஷேப்டு கேமரா (Circular Shaped Camera) டிசைன் வருகிறது. பட்ஜெட் போன்களில் புதுவித டிசைன் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இருக்கிறது.

இருப்பினும், சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) மட்டுமே வருகிறது. ஆகவே, 13 எம்பி கேமரா மற்றும் எல்இடி ஸ்பிளாஷ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டைனாமிக் போர்ட் பீச்சர்கள் வருவதால், பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது.

டபுள் பவர் பட்டன்கள் (Double Power Button) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் (Android 14 Go Edition OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி615 எஸ்ஓசி (Octa Core UNISOC T615 SoC) சிப்செட் வருகிறது.

8 ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல்களும் உள்ளன.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனில் ஸ்டார்ட்ரெயில் பிளாக் (Startrail Black) மற்றும் கிளிட்டெரி ஒயிட் (Glittery White) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.10000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.

இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. முதலில் ஆப்பிரிக்காவின் கனா நாட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் எதிர்பார்க்கலாம். பட்ஜெட்டில் ப்ரீமியம் டிசைன் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 பக்கா தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 1 With 8GB RAM 13MP Camera 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X