Home
Mobile

இதுதான் பட்ஜெட்.. ரூ.9000 போதும்.. டைனாமிக் போர்ட் டிஸ்பிளே.. 15W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமான கம்மி விலைக்கு டைனாமிக் போர்ட் டிஸ்பிளே, சர்க்குலர் ஷேப்டு கேமரா, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 13 எம்பி கேமரா சிஸ்டம் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனில் டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) போன் வெளியாக இருக்கிறது. இந்த டெக்னோ போனின் இந்திய வெளியீடு மற்றும் பட்ஜெட் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போன் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. கம்மியான பட்ஜெட்டை விட கூடுதல் பீச்சர்களை பேக் செய்திருந்ததால், இந்திய வெளியீடு மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இப்போது, செப்டம்பர் மாதத்தில் இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல பட்ஜெட் விவரங்களும் கசிந்துள்ளன.

இதுதான் பட்ஜெட்.. ரூ.9000 போதும்.. டைனாமிக் போர்ட் டிஸ்பிளே மாடல்!

இந்த போன் ரூ.9000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை பேக் செய்கிறது என்பதை குளோபல் மாடலை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், பட்ஜெட் மாடல்கள் பெரும்பாலும் குளோபல் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்ட பீச்சர்களுடன் மட்டுமே வெளியாகும். ஆகவே, இந்த போனிலும் அதே பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 அம்சங்கள் (Tecno Spark Go 1 Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் (Android 14 Go Edition OS) வருகிறது. பட்ஜெட் மாடல்களில் கொடுக்கப்படும் ஆக்டா கோர் யுனிசோக் டி615 எஸ்ஓசி (Octa Core UNISOC T615 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் கூடுதல் டிஸ்பிளே பீச்சராக வெட் மற்றும் ஆய்லி டச் கன்ட்ரோல் (Wet & Oily Touch Control) வருகிறது. இந்த சர்க்குலர் ஷேப்டு கேமரா (Circular Shaped Camera) டிசைனில் 13 எம்பி கேமரா வருகிறது. இந்த கேமராவுடன் எல்இடி ஸ்பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த டெக்னோவில் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 3ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் வருகின்றன. இந்த 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 3ஜிபி ரேம் மாடலில் 3 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது. IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. அதேபோல டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) சப்போர்ட் உள்ளது. பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் டபுள் பவர் பட்டன்கள் (Double Power Button) வருகிறது. ஸ்டார்ட்ரெயில் பிளாக் (Startrail Black) மற்றும் கிளிட்டெரி ஒயிட் (Glittery White) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 1 With 13MP Camera Tipped To Launch in September Under Rs 9000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X