இறங்கி அடித்த Tecno.. வெறும் ரூ.7,200 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் இன்று டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது எல்சிடி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, யுனிசாக் சிப்செட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் கோ 1 அம்சங்கள் (Tecno Spark Go 1 Specifications): 6.67-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 ×720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 13எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 கோடி எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 12என்எம் யுனிசாக் டி615 (12nm Unisoc T615) சிப்செட் வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புத்தம் புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000mAh பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன். பின்பு ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ ஸ்பார்க் கோ 1 போன். அதேபோல் டிடிஎஸ் ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சாதனம்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் நிலை, மைக் ரெக்கார்டிங் மற்றும் கால் அலெர்ட் போன்ற அறிவிப்புகளை பஞ்ச்-ஹோல் கட்அவுட்டின் மேல் உள்ள பேனலில் காட்டக்கூடிய டைனமிக் போர்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் கோ 1 போன். லைம் கிரீன் (Lime Green), கிளிட்டரி ஒயிட் (Glittery White) மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் ( Startrail Black) நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் கோ 1 போனின் விலை ரூ.7,299-ஆக உள்ளது. செப்டம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் அமேசான் மற்றும் டெக்னோ இணையதளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








