Home
Mobile

தெறிக்க விடும் TECNO.. ரூ.8,400-க்கு iPhone டிசைன், 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங், Android 14.. என்ன மாடல்?

சும்மா சொல்லக்கூடாது.. ரியல்மி, மோட்டோரோலா அளவிற்கு இல்லை என்றாலும் கூட டெக்னோ (TECNO) நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் சில தரமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி மற்றும் மோட்டோ நிறுவனங்களிடம் எப்படி நார்சோ மற்றும் ஜி சீரீஸ் உள்ளதோ, அதேபோல டெக்னோ நிறுவனத்திடம் ஸ்பார்க் சீரீஸ் (Spark Series) உள்ளது. இந்த சீரிஸின் கீழ் அறிமுகமாகும் எல்லா மாடல்களுமே பட்ஜெட் விலை மாடல்களாகவே இருக்கும்.

ஸ்பார்க் 20 ப்ரோ (Spark 20 Pro), ஸ்பார்க் 20சி (Spark 20C), ஸ்பார்க் 20 (Spark 20) மற்றும் ஸ்பார்க் கோ 2024 (Spark Go 2024) ஆகிய மாடல்கள் இந்த சீரிஸின் கீழ் அறிமுகமான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் மிகவும் மலிவான மாடல் - ஸ்பார்க் கோ 2024 தான். தற்போது இது ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது.

தெறிக்க விடும் TECNO.. ரூ.8,400-க்கு iPhone டிசைன்.. என்ன மாடல்?

ரூ.10,000-க்குள் என்கிற பிரிவில்.. சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, ஸ் [ டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. காரணம் - இதன் ஐபோன் போன்ற டிசைன் மற்றும் விலையை மீறிய அம்சங்கள். இந்த ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து, டெக்னோ ஸ்பார்க் கோ 1 (Tecno Spark Go 1) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

சுவாரசியமாக ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனும் கூட ஸ்பார்க்கோ 2024 மாடலை போலவே ஐபோன் போன்ற கேமரா ஐலேண்ட்-ஐ கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Passionategeekz வழியாக லீக் ஆன புகைப்படத்தின்படி, டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள கேமரா மாட்யூலில் இரண்டு கேமரா யூனிட்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உள்ளன.

அவைகள் அனைத்தும் வட்டமான எட்ஜ்களுடன், சற்றே உயர்த்தப்பட்ட, சதுர வடிவிலான கேமரா ஐலேண்ட்டிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. அதாவது ஐபோன் 15, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களில் நாம் பார்க்கும் கேமரா ஐலேண்ட் டிசைனை ரெக்டாங்குலர் மாதிரியான சர்க்குலர் டிசைனில் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனின் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெலிதான பெஸல்களை பிளாட் டிஸ்பிளே, ஒப்பீட்டளவில் தடிமனான சின் பகுதி மற்றும் முன் கேமரா சென்சாருக்கான ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டையும் காண முடிகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 720 x 1,600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது யுனிசாக் டி615 சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷனில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஆனது 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைப்பை ஆதரிக்கும் மற்றும் ஐபி54 ரேட்டிங் கட்டமைப்புடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 15W சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரியும் பேக் செய்யப்படலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும்? இந்த ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற விவரம் வெளியாகும் முன்பே, இது உலகளவில் தோராயமாக ரூ.8,400 க்கு அறிமுகம் செய்யப்படும் என்கிற லீக்ஸ் தகவல் வெளியாகி உள்ளது. லீக் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது, இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 1 New Budget 4G Smartphone Launching Soon in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X