Home
Mobile

ஆளுக்கு 1 அள்ளு.. வெறும் ரூ.9000-க்கு 8GB ரேம், டைனமிக் போர்ட், 120Hz டிஸ்பிளே, IP54 ரேட்டிங், டூயல் பிளாஷ்!

Tecno Spark Go 1 Price in India: அப்படியே பார்ப்பதற்கு ஐபோன் டிசைனில் இருக்கும் டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான டெக்னோ ஸ்பார்க் கோ 1 மாடலானது இந்த வார தொடக்கத்தில் தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது யுனிசாக் டி615 சிப்செட், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் கட்டமைப்புடன் வருகிறது. மேலும் இது 13 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் மற்றும் டிடிஎஸ் சவுண்ட் ஆதரவு உடனான டூயல் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் கோ எடிஷனின் (Android 14 Go Edtion) கீழ் இயங்கும் டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஆனது கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரூ.9000-க்கு 8GB ரேம், டைனமிக் போர்ட், 120Hz டிஸ்பிளே, IP54 ரேட்டிங்!

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைன் (Launch Timeline): டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பரில் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இதற்கு வெளியீட்டு நிகழ்வு எதுவும் இருக்காது. செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் வேண்டுமானாலும் திடீரென அறிமுகம் செய்யப்படலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? 91மொபைல்ஸ் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்திய சந்தையில் இதன் விலை ரூ.9,000 ஆக இருக்கும். மேலும் இந்திய வேரியண்ட் ஆனது க்ளோபல் வேரியண்ட்டில் (Global Variant) நாம் கண்ட அதே வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைத்தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

நினைவூட்டும் வண்ணம் டெக்னோ ஸ்பார்ட் கோ 1 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது கிளிட்டரி ஒயிட் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் (Glittery White and Startrail Black) கலர் ஆப்ஷன்களில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போணின் க்ளோபல் வேரியண்ட் மொத்தம் நான்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமானது - 3ஜிபி + 64ஜிபி, 4ஜிபி + 64ஜிபி, 3ஜிபி + 128ஜிபி மற்றும் 4ஜிபி + 128ஜிபி. குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1600 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டுள்ளது. இது 8ஜிபி வரையிலான டைனமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி615 சிப்செட் (Unisoc T615 chipset) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் ஃபிளாஷ் யூனிட் (dual rear flash unit) உடனான 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) கட்டமைப்பை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு டைனமிக் போர்ட் (Dynamic Port) அம்சமும் உள்ளது. இது செல்பீ கேமரா கட்அவுட்டை சுற்றி இருக்கும் பில்-ஷேப்ட்டு பார்-ஐ உருவாகும். அதன் கீழ் நோட்டிபிகேஷன் மற்றும் அலெர்ட்ல்களை பார்க்கலாம். டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஆனது 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இது 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 1 India Launch on September Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X