ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

|

"என்னுடைய பட்ஜெட் ரூ.10,000 தான் பா.. அதுக்குள்ள ஒரு நல்ல ஸ்மார்ட்போனா பார்த்து சொல்லு!" என்று கேட்பவர்களுக்கு எங்களிடம் இருந்து நிறைய பரிந்துரைகள் கிடைக்கும்.

இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ், இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A, மைக்ரோமேக்ஸ் இன் 2பி, ரியல்மி நார்சோ 30A, ரியல்மி C31, ரியல்மி C25, மோட்டோரோலா மோட்டோ இ40 என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அந்த பரிந்துரை பட்டியலில் சேர்ந்துள்ள புதிய மெம்பர்!

அந்த பரிந்துரை பட்டியலில் சேர்ந்துள்ள புதிய மெம்பர்!

மேற்கண்ட எங்களின் பரிந்துரை பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள ஸ்மார்ட்போன் - டெக்னோ ஸ்பார்க் 9டி (Tecno Spark 9T) ஆகும்.

இது டெக்னோ மொபைல் நிறுவனத்தின் ஸ்பார்க் சீரீஸின் கீழ் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான மாடல் ஆகும். எவ்வளவு லேட்டஸ்ட் என்றால், இன்று தான் (ஜூலை 28) இந்தியாவில் அறிமுகமானது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

அறிமுகமாகி ஒரு நாள் கூட ஆகாத ஸ்மார்ட்போனை பரிந்துரைப்பீர்களா?

அறிமுகமாகி ஒரு நாள் கூட ஆகாத ஸ்மார்ட்போனை பரிந்துரைப்பீர்களா?

இன்று அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போனை 'பெஸ்ட் 10கே பட்ஜெட் போன்' என்று எப்படி பரிந்துரைக்கிறீர்கள் என்று நீங்கள் எங்களை கேட்கலாம்.

அதற்கு பதில் - இது ஏற்கனவே (கடந்த மாதமே) நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இப்போது தான் இந்தியாவிற்கு வருகிறது. அதுவும் இந்தியர்களுக்கான சில வேறுபட்ட அம்சங்களுடன்! அதென்ன அம்சங்கள்?

டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பெரிய டிஸ்பிளேவுடன் வரும் Tecno Spark 9T!

பெரிய டிஸ்பிளேவுடன் வரும் Tecno Spark 9T!

டெக்னோ Spark 9T ஆனது FHD+ ரெசல்யூஷன் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை கொண்ட 6.6 இன்ச் டிஸ்ப்ளேவை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது பக்கவாட்டில் உள்ள பவர் பட்டனில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. பின் பக்க டிசைனை பொறுத்தவரை, பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட கேமரா செட்டப்பையும், செங்குத்தான "கோடுகளையும்" பார்க்க முடிகிறது.

Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

விலையை மீறிய மெயின் கேமரா என்றால் அது மிகையாகாது!

விலையை மீறிய மெயின் கேமரா என்றால் அது மிகையாகாது!

இமேஜிங் டிபார்ட்மென்ட்டை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50MP மெய்யின் சென்சார் + 2MP போர்ட்ரெய்ட் கேமரா + ஒரு AI லென்ஸ் உள்ளது.

பட்ஜெட் போன்களில் மட்டுமல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் உள்ள மூன்றாம் நிலை கேமரா மற்றும் நான்காம் நிலை கேமரா கூட பெரிய அளவில் பயன் தராது என்பதால், ஸ்பார்க் 9டி மாடலின் ரியர் கேமராக்களை நம்மால் குறை சொல்ல முடியாது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கொடுக்கும் காசுக்கு ஏற்ற ப்ராசஸர்!

கொடுக்கும் காசுக்கு ஏற்ற ப்ராசஸர்!

Tecno Spark 9T ஆனது MediaTek இன் Helio G35 ப்ராசஸரை பேக் செய்கிறது. இந்த சிப்செட் 4ஜிபி அளவிலான (வழக்கமான) ரேம் மற்றும் 3ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 7ஜிபி ரேம் உடன் வருகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இதில் 64 ஜிபி உள்ளது.

இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி?

பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி?

இந்த லேட்டஸ்ட் டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி யூனிட்டிலிருந்து சக்தியூட்டப்படுகிறது.

கடைசியாக டெக்னோ ஸ்பார்க் 9டி ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான HiOS 7.6 மூலம் இயங்குகிறது.

இந்தியாவில் Tecno Spark 9T விலை நிர்ணயம் என்ன?

இந்தியாவில் Tecno Spark 9T விலை நிர்ணயம் என்ன?

டெக்னோ ஸ்பார்க் 9டி ஆனது ரூ.9,299 என்கிற சிறப்பு வெளியீட்டு விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இதன் அசல் விலை விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

இது டர்க்கைஸ் சியான், அட்லாண்டிக் ப்ளூ, ஐரிஸ் பர்பில் மற்றும் டஹிடி கோல்டு என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

டெக்னோ ஸ்பார்க் 9T பிடிக்கவில்லையா?

டெக்னோ ஸ்பார்க் 9T பிடிக்கவில்லையா?

மேற்கண்ட எந்தவொரு அம்சமும் உங்களை கவரவில்லை என்றால்.. அல்லது டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் விலை சற்றே அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால்.. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் பரிந்துரைத்த 7 ஸ்மார்ட்போன்களின் ஒன்றை கவனத்தில் கொள்ளலாம்.

நினைவூட்டும் வண்னம் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்டியலில் உள்ள இன்னொரு இன்பினிக்ஸ் மாடலான ஸ்மார்ட் 5ஏ ஆனது ரூ.6,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் கம்மி விலையில் வேண்டும் என்றால்?

இன்னும் கம்மி விலையில் வேண்டும் என்றால்?

இதே போல மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஆனது ரூ. 7,999 க்கும், ரியல்மி நார்சோ 30ஏ ஆனது ரூ.8,999 க்கும், ரியல்மி சி31 ஆனது ரூ.8,599 க்கும், ரியல்மி சி25 ஆனது ரூ.9,999 க்கும், மோட்டோரோலா மோட்டோ இ40 ஆனது ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை இன்னும் குறைவான விலைக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஐடெல் ஏ23எஸ் மாடலை கூட நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அதன் விலை ரூ.5,299 ஆகும்.

Photo Courtesy: Amazon

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Spark 9T Latest Budget Phone Under Rs 10000 Launched in India Amazon Sale Starts From August 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X