இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
டெக்னோ நிறுவனத்தின் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்லாண்டிக் ப்ளூ, கோகோ கோல்டு, ஐரிஸ் பர்பிள் மற்றும் டர்க்கைஸ் சியான் நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.8,999-விலையில்வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தை அமேசான் தளத்தில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,408 பிக்சல் தீர்மானம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் HiOS v7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்தசாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு ஏஐ பியூட்டி, ஏஆர் Animoji மற்றும் ஸ்டிக்கர்கள், கூகுள் லென்ஸ், டைம் லேப்ஸ், ஸ்லோ மோஷன், ஸ்மார்ட் போர்ட்ரெய்ட் மற்றும் வீடியோ பொக்கே போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.
பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்..

டெக்னோ பாப் 5 எல்டிஇ
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம். டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 720x1,560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளேவடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ மாடல்.மேலும் டீப்சீ லஸ்டர் மற்றும் ஐஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்
மாடல்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் டெக்னோ பாப் 5 எல்டிஇ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications