Home
Mobile

இனி சியோமி, மோட்டோ போன்கள் எதுக்கு? கம்மி விலையில் 50எம்பி ரியர் கேமராவுடன் புதிய Tecno போன் அறிமுகம்.!

விவோ, சியோமி,மோட்டோ போன்ற நிறுவனங்கள் 50எம்பி ரியர் கேமரா கொண்ட போன்களை நாம் நினைத்து பார்க்க முடியாத விலைகளில் தான் அறிமுகம் செய்கிறது. ஆனாலும் ஒரு சில நிறுவனங்கள் கம்மி விலையில் தரமான கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன.

டெக்னோ ஸ்பார்க் 8பி

அந்த கம்மி விலை வரிசையில் டெக்னோ நிறுவனமும் இணைந்துள்ளது. அதாவது டெக்னோ நிறுவனம் கம்மி டெக்னோ ஸ்பார்க் 8பி (Tecno Spark 8P )எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 8பி விலை

டெக்னோ ஸ்பார்க் 8பி விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளம் வழியே விற்பனைக்கு வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் 8பி  நிறங்கள்

டெக்னோ ஸ்பார்க் 8பி நிறங்கள்

புதிய டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் ஆனது டர்க்கைஸ் சியான், ஐரிஸ் பர்பில், கோல்ட், அட்லாண்டிக் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் சூப்பராக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + VGA லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் மற்ற நிறுவனங்கள் 50எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்கிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக கேமரா அமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம். இதைவிட இதன் சிப்செட் வசதியும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

விவோ, ஒப்போ, சியோமி போன்ற நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் மீடியாடெக் சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன். ஆம் மீடியாடெக் ஹீலியோ ஜ85 சிப்செட் வசதியை கொண்டுதான் வெளிவந்துள்ளது புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த சிப்செட் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங், எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும்.

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன். அதாவது 6.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மொபைல். ஃபுல் எச்டி என்பதால் படங்கள் மற்றும் கேமிங் போன்றவைக்கு சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். எனவே ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் HiOS v7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன். ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் பேட்டரி

வேற லெவல் பேட்டரி

இந்த போனில் வேற லெவல் பேட்டரி உள்ளது என்றுதான் கூறவேண்டும். 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பிஸ்மார்ட்போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதுதவிர கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 8P with 50 MP camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X