4ஜிபி ரேம் உடன் அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ நிறுவனம் 4ஜிபி ரேம் உடன் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 2ஜிபி/3ஜிபி ரேம் உடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

எனவே 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். பின்பு 2ஜிபிரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.7,999-விலையிலும், 3ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.9,299-விலையிலும்
வாங்க முடியும். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,612 பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ்,20:15:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதகி கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் கேமிங்கிற்கான HyperEngine தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு AI பியூட்டி, ஸ்மைல் ஷாட், AI போர்ட்ரெய்ட், HDR, AR ஷாட், ஃபில்டர்கள், டைம் லேப்ஸ், பனோரமா மற்றும் ஸ்லோ மோஷன் உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 8.

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ்; பற்றிய கவலை இருக்காது. மேலும் அம்பியன்ட் லைட் சென்சார்,
ப்ராக்ஸிமிட்டி சென்சார் என பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அதிக நேரம் கேம் விளையாட முடியும்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 8. கிட்டத்திட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் கொடுக்கிறதுஇந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications