48எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் வரும் ஜூன் 15-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சானத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி மெயின் கேமரா + செகன்டரி ஏஐ கேமரா, குவாட் எல்இடி பிளாஸ் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக போர்ட்ரெய்ட் மோட், AI HDR மோட், AR ஷாட், வைட் செல்பி, ஏஐ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்
டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் வசதி, ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக நெபுலா ஆரஞ்சு, மேக்னட் பிளாக் மற்றும் ஜுவல் ப்ளூ போன்ற
நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. ஆனால் வரும் மே 15-ம் தேதி நடைபெறும் முதல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications