ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!

|

டெக்னோ ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போனானது ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டெக்னோவின் புதிய ஸ்மார்ட்போன்

டெக்னோவின் புதிய ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 7 தொடரில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது இந்த வேரியண்டை டெக்னோ ஸ்பார்க் 7பி என அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 90ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 7பி எனப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 7பி

டெக்னோ ஸ்பார்க் 7பி

டெக்னோ ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை மற்றும் விலை முறையாக தெரியவில்லை, கிடைக்கும் தன்மை குறித்து வெளியான தகவலின்படி இந்த ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போனானது ரூ.10,000-த்துக்கும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போன் ஆல்ப்ஸ் ப்ளூ, மேக்னட் பிளாக், ஸ்ப்ரூஸ் க்ரீன் மற்றும் சம்மர் மோஜிடோ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7பி அம்சங்கள்

டெக்னோ ஸ்பார்க் 7பி அம்சங்கள்

டெக்னோ ஸ்பார்க் 7பி அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இயக்கப்படுகிறது. மேலும் ஸ்பார்க் 7 சாதனத்தை போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் உச்சநிலை வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும் இரண்டிலும் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

16 மெகாபிக்சல் ஏஐ டிரிபிள் ரியர் கேமரா

16 மெகாபிக்சல் ஏஐ டிரிபிள் ரியர் கேமரா

டெக்னோ ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போனானது கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 16 மெகாபிக்சல் ஏஐ டிரிபிள் ரியர் கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை எல்இடி ஃபிளாஷ் வசதி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் நைட் பயன்முறை மற்றும் ஸ்மைல் ஸ்னாப்ஷாட் கேமரா அம்சங்கள் ஆதரவு இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் எனவும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படை ஆதரவோடு இது இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புற கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 சிப்செட், இரட்டை பின்புற கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாதுகாப்பு அம்சத்திற்கு பிந்புற கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 7P Smartphone Announced with 90Hz Refresh Rate, 4Gb RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X