Home
Mobile

மே 25: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ.!

கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் மே 25-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ.!

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ.!

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் HIOS 7.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ.!

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். ஆல்ப்ஸ் ப்ளூ, ஸ்ப்ரூஸ் கிரீன், நியான் ட்ரீம் மற்றும் மேக்னட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் மே 25-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 7 Pro with 48 Mega Pixel Camera Launching in India on May 25: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X