புதுசா போன் வாங்க ஐடியா இருக்கா? அப்போ நாளை அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவை மிஸ் பண்ணாதீங்க..
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மே 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ என்பது ஸ்பார்க் 7 மற்றும் ஸ்பார்க் 7 பி ஸ்மார்ட்போன் மாடலுக்குப் பிறகு ஸ்பார்க் 7 வரிசையில் வெளியாகும் மூன்றாவது மாடல் இதுவாகும்.

டெக்னோ நிறுவனம் அறிவித்துள்ள 60 நாட்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்
இது ஆல்ப்ஸ் ப்ளூ, ஸ்ப்ரூஸ் கிரீன், நியான் ட்ரீம் மற்றும் மேக்னட் பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெக்னோ ஸ்மார்ட்போன்களில் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. உங்கள் உத்தரவாதமானது ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 இடைவெளியில் காலாவதியானால், அது இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்பெக்ஸ்
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்பெக்ஸ்
புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 720 x 1600 தெளிவுத்திறன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சாதனம் முன் கேமராவிற்கு மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் AI லென்ஸுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பிராசஸர் மற்றும் ஸ்டோரேஜ் விபரம்
இந்த சாதனம் செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார்ரை கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய HIOS 7.5 இல் இயங்குகிறது. இது ஆக்டா-கோர் ஹீலியோ ஜி 80 சிப்செட் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ, 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது.

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்
ஸ்பார்க் 7 ப்ரோ பயனரின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்கப் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. சின்ஹட்ட சாதனம் 5000 mAh பேட்டரியை 10W சார்ஜிங் ஆதரவுடன் தொகுத்துள்ளது. இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில் இது 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications