Home
Mobile

48எம்பி கேமராவுடன் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் 7 மற்றும் டெக்னோ ஸ்பார்க் 7பி சாதனங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யபபட்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு720 x 1600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி80 பிராசஸர்

ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி80 பிராசஸர்

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் HIOS 7.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11,

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். ஆல்ப்ஸ் ப்ளூ, ஸ்ப்ரூஸ் கிரீன், நியான் ட்ரீம் மற்றும் மேக்னட் பிளாக் போன்றநிறங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். விலை வெளியிடப்பட்டதும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Tecno Spark 7 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X