டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சர்வதேச சந்தையில் டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமரா வசதி, சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இநத சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1640 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஸ்மார்ட்போனில் 480 nits பிரைட்நஸ் வசதிகூட இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஜி70 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், இரட்டை சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.9,200-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications