Home
Mobile

6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் dual ரியர் கேமரா வசதி, சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இநத சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அக்வா ப்ளூ, ஐஸ் ஜேடைட் மற்றும் மிஸ்டரி வைட் போன்ற நிறங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டிசம்பர் 25-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஃப்லைன் தளங்களில் வரும் ஜனவரி 7-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 480 nits பிரைட்நஸ் வசதிகூட இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஏ25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 (HiOS 6.2) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Tecno Spark 6 Go Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X