ரூ.9000-க்கு குறைவாக 3ஜிபி ரேம் அம்சத்தோடு டெக்னோ ஸ்பார்க் 3 ஏர்!

|

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் 3 ஜிபி ரேம் வேரியண்ட் வசதியோடு ரூ.9000-க்கு குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பசம்ங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்போடு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனின் மூன்றாவது மாறுபாடு இதுவாகும். முதலாவதாக 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்ததாக ஆகஸ்ட் மாத இறுதியில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்போடு அறிமுகம் செய்யப்பட்டது.

3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு

3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு

தற்போது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்துள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் ரூ.9,000-க்கும் குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட் விலை

புதிய வேரியண்ட் விலை

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில். டெக்னோ ஸ்பார்க் 6 ஏரின் புதிய மாறுபாடு கிளவுட் ஒயிட், காமட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் ரூ.8,699 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ.7,999 ஆக உள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு அம்சத்தின் விலை ரூ.8,499 ஆக நிர்ணயிக்கப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 6 ஏரின் புதிய மாறுபாடு செப்டம்பர் 25 ஆம் தேதி அமேசான் மூலமாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ray-Ban உடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக் உருவாக்கும் ஸ்மார்ட் கிளாஸ் எப்பொழுது வெளிவரும்!

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் அம்சங்கள்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் அம்சங்கள்

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10, ஹியோஸ் 6.2 இயக்க முறையில் இயங்குகிறது. 7 அங்குல எச்டி+ (720x1640 பிக்சல்கள்) டாட்-நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் கொண்ட ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 25 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில். இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எஃப் / 1.8 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். இது 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியுடன் வருகிறது.

6,000 mAh பேட்டரி

6,000 mAh பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் 6 ஏரின் இந்த மாறுபாடு 64 ஜிபி உள் சேமிப்போடு வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக் கூடிய வசதி உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5.0, 6,000 mAh உள்ளிட்டவைகளில் அடங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Spark 6 Air New variant announced with 3Gb Ram and 64 GB StorageVariant

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X