அக்.16-க்கு அப்புறம் இதுதான்.. பர்கண்டி ரெட்.. ப்ரீஸ் ப்ளூ.. புது TECNO 5G ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் டெக்னோ (TECNO) நிறுவனத்தின் ஸ்பார்க் சீரிஸ் மாடல்களில் புதிய வேரியண்ட் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் (TECNO SPARK) மாடலின் விவரங்கள் இதோ.
வருகிற அக்டோபர் 16ஆம் தேதியன்று டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி (TECNO SPARK 50s 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதில் பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் பிரீஸ் ப்ளூ (Breeze Blue) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. முன்னதாக வெளியான டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO SPARK 50 5G) ஸ்மார்ட்போனை போலவே டிசைன் கொடுக்கிறது.

ஆகவே, அரிசோன்டல் கேமரா பம்ப் கிடைக்கிறது. மெட்டாலிக்-லைக் பினிஷிங் கொண்ட மிடில் ஃபிரேம் கிடைக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலையை பார்த்தால், இதை யூகிக்க முடியும்.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO SPARK 50 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. அதேபோல எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு எப்/1.85 அபெர்சர் கிடைக்கிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக எப்/2.0 அபெர்சருடன் 8 எம்பி ஃபரன்ட் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இது கேமரா மாடலாக இருக்காது. பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே அவுட்புட் கிடைக்கும்.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், வழக்கம்போல சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் வருகிறது.
மேலும், 210 கிராம் எடை கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலானது ரூ.18,499 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இதிலும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. நாளை விலை மற்றும் விற்பனை விவரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
