Home
Mobile

TECNO ஒரே போடு.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு ப்ரீமியம் லுக் கொடுக்கும் ஸ்மார்ட்போன்களில் டெக்னோ நிறுவனத்துக்கும் தனியிடம் இருக்கிறது. இப்போது, டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி (TECNO Spark 50s 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. டிசைன் மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

அரிசோன்டல் கேமரா டிசைனை கொடுத்துள்ளது. ப்ரீலிங்க் (FreeLink) சப்போர்ட் கொண்டுள்ளது. இது பிரத்யேகமாக கிடைக்கிறது. ஆகவே, 1.5 கி.மீ வரையிலான இடைவெளியில், நெட்வொர்க், வை-பை இல்லாமலேயே எஸ்எம்எஸ்கள், கால்களை செய்து கொள்ளலாம். இது 2 ப்ரீலிங்க் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே சாத்தியமாகும்.

TECNO ஒரே போடு.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா!

டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி அம்சங்கள் (TECNO Spark 50s 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. டூயல் நானோ சிம் + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட்கள் கிடைக்கின்றன. 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்து இருக்கிறது.

8 எம்பி செல்பீ கேமரா கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810 எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் கிடைக்கிறது. மேலும், 210 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging) கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50எஸ் 5ஜி கிடைக்கிறது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ நாய்ல் கேன்சலேஷன் (AI Noise Cancellation) போன்ற பீச்சர்கள் உள்ளன. பர்கண்டி ரெட் (Burgundy Red) மற்றும் ப்ரீஸ் ப்ளூ (Breeze Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. அறிமுக சலுகையாக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO SPARK 50s 5G With 50MP Camera Launched in India Under Rs 20000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X