Home
Mobile

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் அடுத்து டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ (Tecno Spark 50 Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் புதிய போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ அம்சங்கள் (Tecno Spark 50 Pro Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்டிமேட் சிப்செட் (MediaTek Helio G100 Ultimate chipset) உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி Sony LYTIA 600 மெயின் கேமரா உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவரும்.

DTS ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ ஸ்பார்க் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போன் பட்ஜெட்டில் விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 50 Pro launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X