தேதி குறிச்சாச்சு.. மார்ச் 27-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு ஏரோஸ்பேஸ் கிரேடு 6 சீரிஸ் அலுமினியம் கேமரா டெகோ, எம்ஐஎல்-எஸ்டிடி மிலிட்டரி கிரேடு பாடி கொண்ட மாடலாக டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO SPARK 50 5G) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்களுடன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வருகிற மார்ச் 27 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அரிசோன்டல் கேமரா டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, டிசைன், கலர், பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

மேலும், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. முந்தைய மாடலான டெக்னோ ஸ்பார்க் 40 5ஜி (TECNO SPARK 40 5G) ஸ்மார்ட்போனின் டிசைனையே இதிலும் பார்க்க முடிகிறது. ஆனால், டூயல் கேமராவுக்கு ஒரே கேமரா பம்ப் கிடைக்கிறது. ஸ்பார்க் 40 5ஜி ஸ்மார்ட்போனின் தனித்தனி கேமரா பம்ப் கிடைத்தது.
அலுமினியம் கேமரா டெகோ (Aluminum Camera Deco)
பிரீமியம் டிசைன் கொடுக்கும்படி ஏரோஸ்பேஸ் கிரேடு 6 சீரிஸ் அலுமினியம் கேமரா டெகோ (Aerospace-Grade 6-Series Aluminum Camera Deco) கிடைக்கிறது. இந்த டிசைனில் ஃபேன்டசி பர்பிள் (Fantasy Purple), மின்ட் கிரீன் (Mint Green), இன்க் பிளாக் (Ink Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO SPARK 50 5G Specifications)
6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி (MIS-STD சர்டிஃபைடு பாடி கிடைக்கிறது. ஆகவே, 1.5 மீட்டர் டிராப் ரெசிஸ்டன்ட் கிடைக்கும். அட்வான்ஸ் சிக்னல் பூஸ்டிங் கொடுக்க யுபிஎஸ் 3.0 டெக்னாலஜி (UPS 3.0 Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஃபாஸ்டர் டவுன்லோட் கொடுக்க 4X4 எம்ஐம்ஓ கனெக்டிவிட்டி (MIMO Connectivity) கிடைத்து உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் சப்போர்ட் கொண்ட எல்லா ஏஐ (ELLA AI) அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹாய்ஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது. மேலும், பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியை கொடுக்க உள்ளது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. டெக்னோ ஸ்பார்க் 40 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைத்தது. இதிலும் அதையே எதிர்பார்க்கலாம். மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட்டில் வருகின்றன.


Click it and Unblock the Notifications








