ஆள் ஆளுக்கு 1 அள்ளும் பட்ஜெட் விலை.. 6500mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. தட்டி விட்ட TECNO.. எந்த மாடல்?
டெக்னோ (TECNO) நிறுவனம் மார்ச் 27 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (Tecno Spark 50 5G) மாடல் ஆகும். என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்? வாருங்கள் டக் டக்கென்று விவரங்களை பார்த்துவிடலாம்.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி டிசைன் மற்றும் அம்சங்கள்: அமேசான் இந்தியாவில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கேமரா பார் உள்ளது. அதில் சென்சார்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ளது மற்றும் வலது பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உள்ளது.

இது கூகுள் பிக்சல் (Google Pixel) ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆப்பிளின் ஐபோன் ஏர் (Apple iPhone Air) ஆகிய மாடல்களில் பார்க்கும் கேமரா டிசைனை போலவே இருக்கிறது. ஆனால் டெக்னோ நிறுவனம் இப்படி "காப்பி அடிப்பது" முதல் முறையல்ல. முன்னதாக வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி மாடலிலும் கூட இதே கேமரா டிசைன் தான் உள்ளது.
உறுதி செய்யப்பட்ட முக்கிய அம்சங்களை பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6500mAh பேட்டரி உடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1.5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் உடையாத தன்மைக்காக MIL-STD சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுவாரசியமாக டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட சிக்னலை அதிகரிக்கும் யுபிஎஸ் 3.0 தொழில்நுட்பத்தின் (signal-boosting UPS 3.0 technology) உதவியால், இது 2 மடங்கு வேகமான பேமெண்ட்டுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.5 கி.மீ. வரை நெட்வொர்க் இல்லாத தொடர்பு வசதியும் (no-network communication feature) உள்ளது.
கடைசியாக டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபேன்டஸி பர்ப்பிள் (Fantasy Purple), மின்ட் கிரீன் (Mint Green), இங்க் பிளாக் (Ink Black) மற்றும் ஷாம்பெயின் கோல்ட் (Champagne Gold) ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
OPINON - யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்? மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும் படி உள்ளன. ஒருவேளை உங்களுக்கு சற்றே மாற்றப்பட்ட டிசைன் உடனான ஒரு ஸ்மார்ட்போன் தேவை என்றால்.. டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த டிசைன் சிலருக்கு புத்துணர்ச்சியாக இருக்கலாம்.
65000எம்ஏஎச் என்கிற பேட்டரி கெப்பாசிட்டி ஆனது - சாதாரண மற்றும் மிதமான பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கும்; ஒரு நாள் முழுவதும் வசதியாக நீடிக்கும். "எனக்கு இது போதும்" என்கிறவர்கள் 7000mAh க்கும் மேற்பட்ட மாடல்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்
என்ன விலைக்கு வரலாம்? பெரும்பாலும் டெக்னோ சப்ரக் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலை பிரிவின் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்லாம். இந்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில் - இது மற்ற போட்டியாளர் ஸ்மார்ட்போன்களை விட ஆரம்பத்திலேயே ஒரு படி முன்னே நிற்கும்!


Click it and Unblock the Notifications








