தெறிக்க விட்டான் TECNO.. பக்கா பட்ஜெட்டில் புது 5G போன்.. 6500mAh பேட்டரி, IP64, பிக்சல்-லைக் கேமரா!
டெக்னோ (TECNO) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (Tecno Spark 50 5G) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
முக்கிய அம்சங்கள்: டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரம்மாண்டமான 6500எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கூகுள் பிக்சல் மாடல்களால் ஈர்க்கப்பட்ட கேமரா டிசைன் உடன் வருகிறது. செயல்திறனுடன், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நிஜ உலகப் பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

விரிவான அம்சங்கள்: டிசைனை பொறுத்தவரை பேக் பேனலில் விண்வெளித் தர அலுமினியத்தால் செய்யப்பட்ட பிக்சல் போன்களில் இருப்பதை போன்ற கேமரா மாட்யூலுடன் வருகிறது. மற்ற பாகங்கள் பாலிகார்பனேட்டால் செய்யப்பட்டிருந்தாலும், அன்றாட வீழ்ச்சிகளைத் தாங்குவதற்காக 1.5 மீட்டர் உயரத்திலிருந்து விழும்போது ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் ராணுவ சான்றிதழ் உடன் வருகிறது. மேலும் தற்செயலாக நடக்கும் நீர் தெறிப்புகளை தாங்குவதற்காக, இந்த போன் ஐபி64 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய பெரிய 6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆனால் இந்த டிஸ்பிளே 720 x 1576 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட ஒரு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மட்டுமே ஆகும். சிப்செட்டை பொறுத்தவரை மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் உள்ளது, இது மல்டிடாஸ்கிங் மற்றும் சாதாரண கேமிங்கை நன்றாக கையாளும்.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி வழியாக விரிவாக்கமும் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை, பகல் நேரங்களில் தெளிவான படங்களை எடுக்க 50எம்பி ப்ரைமரி கேமராவும், வீடியோ கால்களை சிறப்பாக கையாள உதவும் 8எம்பி செல்பீ கேமராவும் உள்ளன.
இது வாட்ஸ்அப் அசிஸ்டன்ட், ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட், ஏஐ எரேசர் 2.0 மற்றும் பல ஏஐ அம்சங்களுடன் வருகிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, அடிக்கடி சார்ஜ் செய்யத் தேவையில்லாமல், நீண்ட நேரம் அல்லது நாட்கள் முழுவதும் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதன் 6500mAh பேட்டரி ஆகும். இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்யவும் முடியும்.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை தேதி விவரங்கள்: விலை மற்றும் விற்பனையை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களின் வழியாக விற்பனைக்கு வரும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 8 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








