பொளக்க போகுது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 120Hz டிஸ்பிளே மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகிய டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO Spark 50 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. யுபிஎஸ் 3.0 டெக்னாலஜி, நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் போன்ற பிரத்யேக பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. 34 சதவீத தள்ளுபடியில் இந்த விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1,400 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.17,099 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

பட்ஜெட் விலையில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான டிராப் ரெசிஸ்டன்ஸ், வாட்டர் மற்றும் டஸ்ட் புரொடெக்சன் கொண்டுள்ளது. ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் 1.5 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஐபி64 ப்ரோ (IP64 PRO) ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
சிக்னல் பூஸ்ட்டிங் கொடுக்க யுபிஎஸ் 3.0 டெக்னாலஜி (UPS 3.0 Technology), கூடுதல் டவுன்லோட் ஸ்பீடு கொடுக்க 4x4 எம்ஐஎம்ஓ சப்போர்ட் (4x4 MIMO Support) கொடுக்கப்பட்டு உள்ளது. நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் (No Network Communication) டெக்னாலஜி வழியாக 1.5 கி.மீ. வரையில் செல்லூலார், வை-பை நெட்வொர்க் இல்லாமலேயே கம்யூனிகேஷன் கொடுக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO SPARK 50 5G Specifications): 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. மேலும், ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி பிரைமரி கேமரா + எப்/1.85 அபெர்சர் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா + எப்/2.0 அபெர்சர் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 8.18 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.3 கிடைக்கிறது.
மேலும், வை-பை 802.11 ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, கியூஇசட்எஸ்எஸ் ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டு உள்ளது. பேண்டஸி பர்பிள் (Fantasy Purple), மின்ட் கிரீன் (Mint Green), இன்க் பிளாக் (Ink Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications