Home
Mobile

நாளை அறிமுகமாகும் புதிய Tecno 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் நாளை (மார்ச் 27) இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (Tecno Spark 50 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (Tecno Spark 50 5G specifications): தரமான டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

நாளை அறிமுகமாகும் புதிய Tecno 5ஜி போன்.. 6500mAh பேட்டரி, எந்த மாடல்?

குறிப்பாக HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

எச்டி டிஸ்பிளே உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த புதிய டெக்னோ போன் ஃபேண்டஸி பர்ப்பிள், மின்ட் கிரீன், இங்க் பிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் நிறங்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 50 5G will be launched in India tomorrow: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X