Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (Tecno Spark 50 5G) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய டெக்னோ போன் நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO Spark 50 5G Specifications): 6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1576 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 560 நிட்ஸ் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core MediaTek Dimensity 6400) பிராஸசர் உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கார்டு ஆதரவு உள்ளது.

HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் மூலம் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி ரியர் கேமரா உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) ஆதரவும் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய டெக்னோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 210 கிராம் ஆகும். ஃபேண்டஸி பர்ப்பிள், மின்ட் கிரீன், இங்க் பிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.18,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark 50 5G phone will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X