செம்ம டிமாண்ட்.. ஆஃபர் ரேட்டில் 6500mAh பேட்டரி 5G ஸ்மார்ட்போன்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் பிரீமியம் லுக் கொடுக்கும் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO Spark 50 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அதிக பேட்டரி பேக்கப், நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கேமரா வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.
பிளிப்கார்ட் விற்பனையில் 32 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.18,999 விலைக்கு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.950 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,049 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO SPARK 50 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆகவே, பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
மேலும், ஹைஓஎஸ் 16 (HiOS 16) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. ஆகவே, கேமராவில் ஹார்ட்வேர் லெவலில் பெரிய அப்கிரேட்கள் கிடையாது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலுக்கு நிகரான டியூரபிட்டி கொடுக்கிறது. ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. இது மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மாடல்களுக்கு கிடைக்கும் சர்டிபிகேஷனாக உள்ளது.
இதுபோக IP64 PRO ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ப்ரொடெக்சன் (Dust & Water Protection) கொடுத்துள்ளது. பிஎஸ் 3.0 டெக்னாலஜி (UPS 3.0 Technology) கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, சிக்னல் பூஸ்ட் கொடுக்கும். மற்ற பீச்சர்கள் வழக்கம்போல இருக்கின்றன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் வருகிறது. ஆகவே, இது ஸ்லிம் மாடல் கிடையாது. மொத்தமாக 210 கிராம் எடை கொடுக்கிறது. பேண்டஸி பர்பிள் (Fantasy Purple), மின்ட் கிரீன் (Mint Green), இன்க் பிளாக் (Ink Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications