டெக்னோ 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அக்டோபர் 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO Spark 50 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.21,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO Spark 50 5G Specifications): தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core MediaTek Dimensity 6400) பிராஸசர் உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கார்டு ஆதரவு உள்ளது.
அதேபோல் 6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1576 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 560 நிட்ஸ் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறிப்பாக HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் மூலம் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 50எம்பி ரியர் கேமரா உடன் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) ஆதரவும் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் எடை 210 கிராம் ஆகும். ஃபேண்டஸி பர்ப்பிள், மின்ட் கிரீன், இங்க் பிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
