புதிய Tecno போன் அறிமுகம்.. 5200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் 40 (Tecno Spark 40) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங், 45W சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது டெக்னோ ஸ்பார்க் 40 போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 40 அம்சங்கள் (Tecno Spark 40 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி81 சிப்செட் (MediaTek Helio G81 chipset) வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் HiOS ௧௫ சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ரியர் கேமராவுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன். மேலும் DTS சவுண்ட் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5200எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் டூயல் சிம், வைஃபை, புளூடூத், எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர் இயூஎஸ்பி-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளது. பின்பு IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
ஆனால் டெக்னோ ஸ்பார்க் 40 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது உகாண்டாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போன் ரூ.11,384 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் பிளாக், டைட்டானியம் கிரே, வெயில் ஒயிட் மற்றும் மிராஜ் ப்ளூ நிறங்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








