ரூ.7,999-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் அருமையான ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்தியாவில் டெக்னோ நிறுவனம் புதிய மூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 4 எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம் மற்றும் ஊதா நிறங்களில் வெளிவந்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 4
இந்த டெக்னோ ஸ்பார்க் 4 ஸமார்ட்போன் மாடல் இந்தியாவில் ஆஃப்லைன் கடைகள் மற்றும் சில ஆன்லைன் தளங்களில்கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி 8ஏ, ரியல்மி சி2, மோட்டோ இ6எஸ், இன்பினிக்ஸ் ஹாட் 8, நோக்கியா 3.2, லெனோவா ஏ6 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே
டெக்னோ ஸ்பார்க் 4 ஸமார்ட்போன் பொதுவாக 6.5-இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்மாடல் வெளிவந்துள்ளது. மேலும் Anti-Oil fingerprint சென்சார் மற்றும் பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஹீலியோ ஏ22 குவாட்-கோர் பிராசஸர் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகஅருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்
டெக்னோ ஸ்பார்க் 4 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + விஜிஏ கேமரா எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் அடக்கம்.
சேமிப்பு மற்றும் விலை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999/-
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999/-


Click it and Unblock the Notifications