Home
Mobile

இதை விட்ராதீங்க.. ரூ.12,349 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (TECNO Spark 30C 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி 600 சிப்செட்டை கொடுத்துள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 13 சதவீத தள்ளுபடி விலையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன், ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த பேங்க் தள்ளுபடி போக ரூ.12,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இதை விட்ராதீங்க.. ரூ.12,349 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி!

டைனாமிக் போர்ட் (Dynamic Port), 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் டாட்-இன் எச்டிபிளஸ் டிஸ்பிளேவை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இதை தவிர மற்ற பீச்சர்கள் பக்காவாகவே இருக்கின்றன. இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப கேமரா இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி அம்சங்கள் (TECNO Spark 30C 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹைஓஎஸ் 14 (HiOS 14) கிடைத்துள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் டாப் வேரியண்ட்டாக இருக்கிறது. இதுபோக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி இருக்கிறது. மேலும், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுத்துள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொடுக்கப்பட்டு உள்ளது.

48 எம்பி மெயின் கேமரா கிடைத்துள்ளது. இந்த கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சார் வருகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரண்ட் கேமராவை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.67 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைத்துள்ளது. லைட் வெயில் மாடலாக இருக்கிறது. ஆகவே, 189.2 கிராம் எடை மட்டுமே வருகிறது. இருப்பினும், 8 எம்எம் தடிமனை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி கொடுத்துள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது. மிட்நைட் ஷோடோ (Midnight Shadow), அரோரா கிளவுட் (Aurora Cloud) மற்றும் அசுர் ஸ்கை (Azure Sky) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark 30C 5G With 8GB RAM 48MP Camera Gets 13 Percent Discount in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X