மிரளுது மார்கெட்.. ரூ.9000 போதும்.. SONY கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட டைமன்சிட்டி 6300 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (TECNO Spark 30C 5G) போன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த டெக்னோவின் விலை எப்படி? பீச்சர்கள் என்ன? விவரம் இதோ.
டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி அம்சங்கள் (TECNO Spark 30C 5G Specifications): இந்த டெக்னோ போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா + செகண்டரி ஏஐ லென்ஸ் பேக் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் லுக்கில் 3 கலர்களில் வெளியாகி இருக்கிறது.

அரோரா கிளவுட் (Aurora Cloud), அசுர் ஸ்கை (Azure Sky) மற்றும் மிட்நைட் ஷேடோ (Midnight Shadow) கலர்கள் இருக்கிறது. மேலும், டிரான்ஸ்பார்மர் பேக் பேனல் கேஸ் கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி போனில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது.
மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டெக்னோவில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.
இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. IP54 ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது.
அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1000 அறிமுக சலுகையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.8,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ள முடியும். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் நல்ல கேமரா மாடல் வேண்டுமானால், இந்த போனை ஆப்ஷனில் எடுக்கலாம்.
டெக்னோ நிறுவனம் அடிமட்ட பட்ஜெட்டில் 5ஜி போன்களை களமிறக்கி வருகிறது. ரூ.1000 பட்ஜெட்டிலும் சோனி சென்சார் கேமராவை கொடுத்து கஸ்டமர்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே, சோனி சென்சாருடன் டெக்னோ பாப் 9 5ஜி போனை இந்திய மார்கெட்டில் களமிறக்கியது. இப்போது, டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி போனை களமிறக்கி இருக்கிறது. 2 மாடல்களும் ஒரே டிசைனில் வந்துள்ளன.


Click it and Unblock the Notifications








